Saturday 14 July 2012

Cablesankar - vettai - review


v7ஒரு படம் நல்லாருக்கா இல்லையாங்கிறதை தியேட்டர் கேண்டீன்ல ஆகிற வியாபாரத்தை வச்சி சொல்லிரலாம்னு என் நண்பர் சிவகுமார் சொல்லுவாரு. படம் சூப்பரா இருந்தா கையில் இருக்கும் காசை சந்தோஷமா செலவு பண்ணுவாங்களாம். மொக்கையா இருந்தா நிச்சயம் வியாபாரம் குறைவாகவும், நிச்சயம் ஒரு சண்டை அன்னைக்கு நடந்தே தீரும் என்றும் சொல்வார். அவர் ஒரு தியேட்டர் கேண்டீன் ஓனர். சைக்காலஜி.தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் மல்டி ஸ்டார் காஸ்டிங். யாராவது ரெண்டு பேர் காம்பினேஷனை உக்காந்து யோசிச்சிட்டா போதும், அதுக்கப்புறம் கொஞ்சம் கூட யோசிக்கிறதேயில்லைங்கிற முடிவோட படமெடுக்க ஆரம்பிச்சிருவாங்க. நாமளும் படம் பாக்க, மொத நாளே டிக்கெட் ரிசர்வ் செய்திட்டு போயிருவோம். 


v6தெலுங்கு நாகபாபுவோட (தெலுங்கு டப்பிங்குக்கு ஆச்சு) பசங்க ஆர்யாவும், மாதவனும், நாகபாபு போலீஸு. ப்ளாஷ்பேக்குல கதை ஆரம்பிக்குது. காத்தாடி விடற சண்டையில ஒரு பையன இன்னொரு பையன் அடிச்சிடறான். அதுக்கு அந்தப் பையன் என்னை அடிச்சிட்ட இல்லை இரு என் தம்பிய கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி கூட்டிட்டு வந்து தம்பிய விட்டு அடிய பின்னிடறான். அண்ணன் கோழை, தம்பி வீரனாம். அதுக்கு அப்புறம் கூட அதே போலவே வளர்றானுங்க. ரன் படம் போல பொண்ணுங்கள வச்சி ஒரு பாட்டு பாடிட்டு, வீட்டுக்கு போனா அப்பா டெத்தாயிடுறாரு. அப்பா வேலைய அண்ணன் மாதவனுக்கு கொடுக்கிறாங்க. பொறவு என்ன? அண்ணன் ரகசிய போலீஸ் 100ல பாக்யராஜ் போல அண்ணனுக்கு பதிலா தம்பி எல்லா வீரதீர சாகஸத்தை செஞ்சு அண்ணனுக்கு பேர் வாங்கிக் கொடுக்கிறாரு. இதுக்கு நடுவுல லவ், கல்யாணம், கர்ப்பம், பத்து சீனுக்கு ஒரு வாட்டி ஞாபகம் வந்ததும், வில்லன்ங்க.. இப்படியே போய் அவனுங்களை வீரம் வந்த மாதவனும், ஆர்யா எப்படி அழிக்கிறாங்கன்னுதான் கத. ங்கொய்யால..
v1ஆரம்பக் காட்சியப் பார்த்ததுமே தியேட்டரில் அடுத்தடுத்த காட்சிய சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. படத்துப் பேரோட. அந்தளவுக்கு மக்களை தங்கள் காட்சிகளால் கட்டிப் போட்டுட்டாங்க. அதுக்கு அப்புறம் காட்சிக்கு காட்சி கைத்தட்டல்தான்னா பாத்துக்கங்களேன். ஆர்யாவின் நடிப்பு.. சாரி நடிப்புன்னு சொல்லவே முடியலை.. கேரக்டரோட அப்படியே செட்டாயிட்டாரு. மாதவன் மட்டும்தான் நடிக்க முயற்சி செய்யுறாரு.. அதிலேயும் வில்லன் வீட்டுல ஒரு லோக்கல் ரவுண்ட் சுத்துற சேர்ல ஸ்டைலா சிரிக்கிறேன்னு வாய ஒரு மாதிரி வச்சிட்டு சிரிக்கிறாரு பாருங்க.. பார்த்தாலே வில்லன் டெரர் ஆயிருவான். அப்படி ஒரு சிரிப்பு. வில்லனா ஆதோஷ் ராணா. பாவம் அவரு. தூத்துக்குடிகாரங்க மாதிரியுமில்லாம, இந்திக்காரன் மாதிரியுமில்லாம ஒரு அறைகுறை வில்லன். டெரன் வில்லன்னு காட்டறதுக்காக நம்ம சண்முகராஜனுக்கு கை கால் இல்லாம ஒரு மேக்கப் போட்டிருக்காங்க பாருங்க சூப்பரு. ஒரு சீன்னாலும் டெரர் சீனு. பார்த்த ஒடனேயே அடிவயிறுல கத்தி சொருகினாப்போல இருக்குது. என்னா சீன் டா… வில்லனுக்கு டப்பிங் கொடுத்த தலைவாசல் விஜய் நல்லா நடிச்சிருக்காரு. அதுக்கு அவரையே வில்லனா போட்டிருக்கலாம். அது சரி பெரிய பட்ஜெட் படம். தமிழ் தெரியாத மலையாள, ஹிந்திக்காரங்கள போட்டாத்தானே ரிச்சா இருக்கும்.

கதாநாயகிகளா ரெண்டு பேரு சமீராரெட்டி, அமலாபால். சமீரா எல்லா ஆங்கிள்லேயும் அசிங்கமா இருக்காங்க. அமலாபால் மட்டும் வயசு கொடுக்கும் மவுசுல அங்கிங்க செழுமையா இருக்காங்க.. படத்தில சமீரா தூத்துக்குடி பொண்ணாம். படம்பூரா ஸ்லாங்கேயில்லாம இங்கிலீஷ் வார்த்தைகளை பேசிட்டிருக்காங்க. இதுல அமலாபால் ஒரு சீன்ல டீம்லீடர்னு வேற சொல்றாங்க.. 
v3ஒளிப்பதிவு நிரவ்ஷாவாம். அவரோட கடைசி அஸிஸ்டெண்ட் செய்த படமாயிருக்கும்னு தோணுது. கமலா தியேட்டரில் கிரேடிங் செய்யாத ப்ரிண்டைக் கொடுத்திட்டாங்க போலருக்கு. இல்ல மொத்த படமே அந்த லட்சணம்தானான்னு தெரியல.. படு டல்லடிக்குது. மீசிக் யுவன் சங்கர் ராஜாவாம். பப்பபாபா பாட்டு யுடூயுபுல இருந்த அளவுக்கு கூட பெப்பியா இல்லை. ரிரிக்கார்டிங் படு கொடுமை. இதுவும் அவரோட கடைசி அஸிஸ்டெண்ட் போட்டுக் கொடுத்திருபாரோ.. ?
v4(மேலே உள்ள ரெண்டு ஸ்டில்களுக்கு எவ்வளவோ மெனக்கெட்டிருக்காங்களோ.. அந்த அளவுக்குக்கூட கதைங்கிற ஒரு விஷயத்துக்கு மெனக்கெடல. முடிஞ்சா ஆறு வித்யாசம் கண்டு பிடிங்க பாக்கலாம் இந்த படங்கள்ல..)

எழுதி இயக்கியவர் லிங்குசாமியாம். ரெண்டு ஹீரோ கால்ஷீட் கிடைச்சாச்சு. ரெண்டு பேருக்கும் முக்யத்துவம் உள்ள கதை வேண்டும். அதாவது அவருக்கு ஒரு ஹீரோயின்னா, இவருக்கு ஒரு ஹீரோயின், அவர் விரர்ன்னா, இவருக்கும் கடைசியில வீரம் வரணும். அவருக்கு ரெண்டு பைட்டுன்னா, இவருக்கும் ரெண்டு பைட்டு, போனா போவட்டும்னு ஒரு பாட்டு எக்ஸ்ட்ராவா ஆர்யாவுக்கு கொடுத்துருவோம். அப்புறம் லிப் டு லிப் கிஸ் சீன் இருக்கே.. அட அட அட.. என்னாமா கொடுக்கிறாய்ங்கடா.. அடகிரகமே.. முடியலை.. பல்லு தேய்க்காதவனை முத்தம் கொடுக்கிறா மாதிரி மூச்சிய வச்சிட்டு ஸ்ஸுபா.. படம் பழைய எம்.ஜி.ஆர் படங்களின் ஸ்பூப்புன்னு முன்னாடியே சொல்லியிருந்தா ஒரு மாதிரி ப்ரிபேர் ஆகி வந்திருப்போமில்ல. வர்ற ஒவ்வொரு சீனையும், சந்தோஷமா ரசிச்சு செம்மயா கிண்டல் பண்ணியிருக்கீங்கன்னு கைதட்டி ரசிச்சிருப்போமில்ல. அதிலேயும் அண்ணனை நடக்க வைக்க தம்பி அடிவாங்குற சீன் இருக்கே.. ஆ…ஆஆஆஆஆஆஆ.. முடியல.. கண்ணுல தண்ணி முட்டிட்டு வருது. லாஜிக்குன்கிற ஒரு வஸ்துவை எங்க தேடினாலும் கிடைக்காது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ‘தேரடி வீதியில் தேவத வந்தா பாட்டு மாதிரி பாட்டை எடுத்திட்டு இருப்பீங்க. எனக்கே ஷட்டரான்னு மாதவன் சொல்லும் போது தியேட்டர்ல கை தட்டுவாங்கன்னு நீங்க நினைச்சது புரியுது. ஆனால் விவேக் சொன்னாக்கூட சிரிக்கிற நிலையில்லாத அளவுக்கு பழசாயிருச்சுன்னு எப்படி உங்களுக்கோ, உங்க டீமுக்கோ தெரியாமா போயிருச்சு. புருஷனுக்கு ரெண்டு காலும் விளங்காம் போற அளவுக்கு அடிபட்டிருக்குமாம். வீட்டுல யாருக்குமே தெரியாதாம். அடுத்த சீன்ல வீட்டுல பொண்டாட்டி பாத்துட்டு “என்ன ஆச்சு? மூணு நாளா எதுவும் சொல்லலைன்னு” டயலாக் வச்சிட்டா சரியாயிருச்சாம். கொஞ்சமாவது படம் பாக்குறவனை மதிங்க சார். எது   எப்படியோ.. பதினெட்டு கோடிக்கு  படத்தை தலையில கட்டியாச்சு. இனி யுடிவி பாடு நமக்கென்ன.. இந்த மாதிரியே ஆர்டிஸ்ட் காம்பினேஷனை மட்டுமே வைத்து படமெடுத்த கார்பரேட் கம்பெனிகளின் நிலையைப் பற்றி இதற்கு முன் இதே நிலையில் படமெடுத்த கார்பரேட் கம்பெனிகளின் நிலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு படம் நல்லாருக்கா இல்லையாங்கிறதை தியேட்டர் கேண்டீன்ல ஆகிற வியாபாரத்தை வச்சி சொல்லிரலாம்னு என் நண்பர் சிவகுமார் சொல்லுவாரு. படம் சூப்பரா இருந்தா கையில் இருக்கும் காசை சந்தோஷமா செலவு பண்ணுவாங்களாம். மொக்கையா இருந்தா நிச்சயம் வியாபாரம் குறைவாகவும், நிச்சயம் ஒரு சண்டை அன்னைக்கு நடந்தே தீரும் என்றும் சொல்வார். சைக்காலஜி.

நேத்து இண்டர்வெல்ல காண்டீன்காரனோட நான் சண்டை போட்டேன்.

வேட்டை – காசு கொடுத்து படம் பாக்குறோம். கொஞ்சமாவது அவங்கள மதிங்க சார்..

No comments:

Post a Comment